Welcome to tnhighways   Click to listen highlighted text! Welcome to tnhighways Powered By GSpeech

திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு

நெடுஞ்சாலைத் துறையில் பல்வேறு அலகுகளால் செயலாக்கப்படும் ஆற்றுப் பாலங்கள் பல்வழிசாலை மேம்பாலங்கள் இருப்புப்பாதை கடவுகளுக்கான மேம்பாலங்கள் கீழ்பாலங்களுக்கான தளவிவரங்களை சேகரித்து அவற்றிற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு அலகினால் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த அலகு ஒரு தலைமைப்பொறியாளரின் கீழ் ஒரு இணைத் தலைமைப்பொறியாளர் நான்கு வடிவமைப்பு கோட்டங்கள் சென்னையிலும் மற்றும் ஐந்து ஆய்வுக் கோட்டங்கள் சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டும் செயல்பட்டு வருகிறது.

ஆய்வுக் கோட்டங்களும், அவற்றின் பணிகளும்

ஆய்வுக் கோட்டங்கள் மூலம் பின்வரும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தள ஆய்வு செய்தல் மற்றும் மண்ணின் தாங்குதிறன் ஆய்வு செய்தல்
  • பாலம் மற்றும் சாலை அமையவுள்ள இடத்தில் விரிவான கள ஆய்வு மேற்கொண்டு தள விவரங்களை சேகரித்தல்.
  • ஆற்றுப் பாலங்களுக்கு பொதுப் பணித் துறையிடமிருந்தும், இரயில்வே மேம்பாலங்கள் / கீழ்பாலங்கள் ஆகியவற்றிற்கு இரயில்வே நிர்வாகத்திடமிருந்தும் தேவையான அனைத்து விவரங்களையும் பெறுதல்.
  • பாலத்தின் அடித்தளத்தை வடிவமைக்க தேவையான மண்ணின் தன்மை மற்றும் தாங்குதிறனை ஆழ்துளைகளின் மூலமாக சேகரித்தல்.
விரிவானஅறிக்கை மற்றும் வரைபடம் தயாரித்தல்
  • தள விபரங்கள் அடங்கிய தளவரைபடம் தயாரித்தல்.
  • நேர்பாடு வரைபடங்கள் தயார் செய்தல்.
  • நீரோடையின் குறுக்குவெட்டு மற்றும் நீள்வெட்டு வரைபடங்கள், பாலம் அமையவுள்ள இடத்தின் நேர்ப்பாடு வரைபடம் தயாரித்தல் மற்றும் நீரியல் விவரங்களைக் கண்டறிதல்.
  • ஆழ்துளை மற்றும் மண்ணியல் ஆய்வுகளின் அடிப்படையில் செயலாக்கத்திற்கு தேவையான தகுந்த கருத்துருக்களை தயார் செய்தல்.
வடிவமைப்புக் கோட்டங்களின் பணிகள் பின் வருமாறு:-
  • ஆற்றுப் பாலம், இரயில்வே கடவுகளில் சாலை மேம்பாலம் மற்றும் கீழ்ப்பாலம், சாலை சந்திப்புகளில் பல்வழிச் சாலை மேம்பாலம் மற்றும் நெடுஞ்சாலையின் இதர கட்டமைப்புகளுக்கான வடிவமைப்புகள், வரைபடங்கள், மதிப்பீடுகள் ஆகியவற்றை தயாரித்தல்.
  • ஓப்பந்ததாரர்களிடமிருந்து பாலப்பணிகளுக்காக பெறப்படும் மாற்று வடிவமைப்புகளை கூர்ந்தாய்வு செய்து ஒப்புதல் வழங்குதல்.
  • துறையின் பல்வேறு அலகுகளிலிருந்து ஆலோசகர்கள் மூலம் தயாரிக்கப்படும் விரிவான திட்ட அறிக்கைகளை சரிபார்த்து ஒப்புதல் வழங்குதல்.
  • பாலப் பணியின் செயலாக்கத்தின் போது மண்ணின் தன்மையில் மாற்றம் காரணமாக தேவைப்படும் பாலத்தின் பகுதிகளை திருத்தி வடிவமைத்தல்.
  • மிகப் பெரிய கனரக சுமையுந்துகள் சாலைகளில் / பாலங்களில் செல்வதற்காக அனுமதி பெறுவதற்கு கூர்ந்தாய்வு செய்து தக்க பரிந்துரை செய்தல்.
  • பிற துறைகளால் கட்டப்படும் பாலங்களின் வடிவமைப்புகளை கூர்ந்தாய்வு செய்து ஒப்புதல் வழங்குதல்.
முடிக்கப்பட்ட பணிகள் (2018-19)
  • இருப்புப் பாதை கடவுகளில் 8 மேம்பாலங்கள் / கீழ்பாலங்கள் / வரையறுக்கப்பட்ட கீழ்பாலம், 60 ஆற்றுப் பாலங்கள், 5 சாலை மேம்பாலங்கள் மற்றும் 1 பல்வழிச் சாலை மேம்பாலம் ஆகிய பணிகளுக்கான வடிவமைப்பு வரைபடம் மற்றும் மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன்.
  • அதிக எடையும், அளவில் பெரியதுமான இரண்டு திரு மகா விஷ்ணு சிலைகளை வந்தவாசியிலிருந்து பெங்களூருவுக்கு, தர அளவுகளில் பொருந்தாத பெரிய கனரக சுமையுந்தில் எடுத்து செல்வதற்கான கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு கருத்துரை வழங்கப்பட்டது.
  • 3 ஆற்றுப் பாலங்கள் மற்றும் 1 இரயில்வே மேம்பாலத்திற்கான திருத்திய மாற்று வடிவமைப்புகள் மற்றும் வரைபடங்கள் தயாரித்து அளிக்கும் பணிகள் வடிவமைப்பு அலகின் மூலம் நிறைவேற்றப்பட்டன.
  • ஆலோசகர்களால் தயாரிக்கப்பட்ட 5 ஆற்றுப் பாலங்கள் / இரயில்வே மேம்பாலங்கள் / கீழ்பாலங்கள் / சாலை மேம்பாலம் / நடை மேம்பாலங்கள் ஆகிய பணிகளுக்கான வடிவமைப்பு மற்றும் வரைபடங்கள் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.
  • 2018-2019ல் மொத்தம் 86 பால வடிவமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 2019 முதல் ஜூலை 2019 வரை முடிக்கப்பட்ட பணிகள் :
  • ஏப்ரல் 2019 முதல் ஜூலை 2019 முடிய இருப்புப்பாதை கடவுகளில் 2 மேம்பாலங்கள், 1 வரையறுக்கப்பட்ட கீழ்பாலம் மற்றும் 20 ஆற்றுப் பாலங்கள் ஆகிய பணிகளுக்கான வடிவமைப்பு வரைபடம் மற்றும் மதிப்பீடு தயாரிக்கும் ஆகிய பணிகள் நிறைவேற்றப்பட்டன.
  • 1 ஆற்றுப் பாலம், 2 இரயில்வே மேம்பாலங்கள் ஆகிய பணிகளுக்குண்டான திருத்திய மாற்று வடிவமைப்புகள், மதிப்பீடுகள் தயாரித்து அளிக்கும் பணிகள் வடிவமைப்பு அலகின் மூலம் நிறைவேற்றப்பட்டன.
  • ஆலோசகர்களால் தயாரிக்கப்பட்ட 2 ஆற்றுப் பாலங்கள் ஆகிய பணிகளுக்குண்டான வடிவமைப்பு மற்றும் வரைபடங்கள் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.
  • ஆலோசகர்களால் தயாரிக்கப்பட்டு பெறப்பட்ட 1 ஆற்றுப் பாலம், 1 இரயில்வே மேம்பாலம், 1 பல்வழிச் சாலை மேம்பாலம் மற்றும் 1 இரண்டு அடுக்கு மேம்பாலம் ஆகிய பணிகளுக்கான திருத்திய வடிவமைப்புகள் மற்றும் வரைபடங்கள் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.
  • மேற்கண்ட 32 பாலப் பணிகளும் இவ்வலகின் மூலம் ஏப்ரல் 2019 முதல் ஜூலை 2019 வரை நிறைவேற்றப்பட்டன.
நடப்பாண்டில் திட்டமிடப்பட்டு மற்றும் எதிர்நோக்கும் பணிகள் :

நடப்பாண்டில், ஜூலை 2019 முடிய 32 பாலப் பணிகளின் வடிவமைப்புகள் முடிக்கப்பட்டுள்ளன. தற்போது கையிருப்பில் உள்ள 40 பாலப்பணிகளின் வடிவமைக்கும் பணிகள் வெவ்வேறு நிலைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை தவிர 2019-2020 நிதியாண்டில் பெறப்படவுள்ள பணிகளும் இவ்வலகின் மூலம் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

தலைமைப்பொறியாளர் (நெ)க்காக,
திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு,
சென்னை-25.


Feedback

Visitors Counter

001092538

Click here to watch Live Events

Last Updated: 22-02-2020
Click to listen highlighted text! Powered By GSpeech