Welcome to tnhighways   Click to listen highlighted text! Welcome to tnhighways Powered By GSpeech

தற்போதைய வேலைக்கான வரைபடம்

பெருநகரம்

பெருநகர அலகு, சென்னை பெருநகர பகுதிகளில் இரண்டாவது பெருந்திட்ட நோக்கங்களை நிறைவேற்ற ஒரு தலைமைப் பொறியாளரின் கீழ் ஒரு வட்டம் மற்றும் 5 கோட்டங்களுடன் செயல்பட அமைக்கப்பட்டது.

அடிப்படை கட்டுமான வசதிகளான பல்வழிச்சாலை மேம்பாhலங்கள், சாலைகளை அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல், இணைப்புச் சாலைகள் ஏற்படுத்துதல், ஆற்றுப் பாலங்கள் கட்டுதல், தானியங்கி வசதிகளுடன் கூடிய நடை மேம்பாலங்கள் பாதசாரிகள் சுரங்கபாதைகள் கட்டுதல், இருப்புப் பாதை கடவுகளில் இரயில்வே மேம்பாலம் மற்றும் கீழ்ப்பாலம் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு சென்னை பெருநகர போக்குவரத்து அமைப்பினை மேம்படுத்த கட்டுமான பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர பகுதிகளில் இந்த அடிப்படை கட்டுமான மேம்பாடுகளால் பிரதான சாலை சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டும் மற்றும் சாலை விபத்துக்களும் வெகுவாக குறைக்கப்படுகிறது.

சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டம் (CMDP) :

சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டம் 2003 - 2004 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு மாநில அரசின் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் அடிப்படைக் கட்டுமானங்கள் செயல்படுத்தப் படுகிறது. சென்னை மாநகருக்கான இரண்டாம் பெருந்திட்டப்படி இத்திட்டங்கள் (2010-2026) சென்னை பெருநகர பகுதிகளுக்கான விரிவான போக்குவரவு மற்றும் போக்குவரத்து ஆய்வு மூலம் (CTTS) பரிந்துரை செய்துள்ள திட்டப் பணிகளை முன்னுரிமைப்படி வரிசைப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

நடைபெற்று வரும் பெரும் பணிகள் பின்வருமாறு :

பல்வழிச்சாலை மேம்பாலங்கள் (Grade Separators)

வ.எண் பணியின் பெயர் மதிப்பு ரூ. கோடியில்
 

நிலுவை பணிகள்

 
 

முடிவுற்ற பணிகள்

 

1

பெரியார் ஈ.வெ.ரா. சாலையில் நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு மற்றும் அண்ணா வளைவில் அண்ணாநகர் 3வது நிழற் சாலை சந்திப்புகளை இணைத்து மேம்பாலம் கட்டுதல் (பகுதி - I, II மற்றும் III).

117.00

2

வடபழனியில், உள்வட்ட சாலை - என். எஸ்.கே. சாலை (ஆற்காடு சாலை) சந்திப்பில் பல்வழிச்சாலை மேம்பாலம் சென்னை பெருநகர இரயில்வே திட்டம் (CMRL) மூலமாக கட்டுதல்

69.43

3

உள்வட்டச்சாலையில் கொளத்தூர் அருகில் இரட்டை ஏரிப்பகுதியில் பெரம்பூர் செங்குன்றம் சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைத்தல் (இடது புறம்)

52.72

4

போரூரில் கோடம்பாக்கம் - திருப்பெரும்புதூர் சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை சந்திப்பில் பல்வழிச்சாலை மேம்பாலம் கட்டுதல்.

54.00

 

மொத்தம்

293.15

 

நடைபெறும் பணிகள்

 

5

ஜி.எஸ்.டி. சாலையில் பல்லாவரத்தில் சந்தை சாலை மற்றும் குன்றத்துhர் சாலை சந்திப்புகளை இணைத்து பல்வழிச்சாலை மேம்பாலம் அமைத்தல்

82.66

6

வேளச்சேரியில் விஜயநகரம் சந்திப்பில் தரமணி சாலை, தாம்பரம் வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலைகள் இணையும் இடத்தில் மேம்பாலம் அமைத்தல்

108.00

7

ஜவஹர்லால் நேரு சாலையில் கோயம்பேட்டில் காளியம்மன் கோயில் தெரு சந்திப்பு மற்றும் சென்னை புறநகர் பேருந்து நுழைவு வாயில் சந்திப்புகளை இணைத்து மேம்பாலம் அமைத்தல்

93.50

8

மேடவாக்கத்தில் மறைமலை அடிகள் பாலம் இரும்புலியூர் சாலையுடன் மேடவாக்கம் சோழிங்கநல்லுhர் சாலை சந்திப்பு, மேடவாக்கம் மாம்பாக்கம் சாலை சந்திப்பு மற்றும் மவுண்ட் மேடவாக்கம் சாலை சந்திப்புகளில் பல்வழிச்சாலை மேம்பாலம் அமைத்தல்

146.41

9

கீழ்கட்டளை அருகே மவுண்ட் மேடவாக்கம் சாலை மற்றும் பல்லாவரம் துரைப்பாக்கம் சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைத்தல்

64.00

10

உள்வட்டச்சாலையில் கொளத்துர் அருகில் இரட்டை ஏரிப்பகுதியில் பெரம்பூர் செங்குன்றம் சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைத்தல் (வலது புறம்)

32.03

 

மொத்தம்

526.60

 

நிலஎடுப்பு பணி

 

11

கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் சந்திப்பில் பல்வழிச்சாலை மேம்பாலம் அமைத்தல் (நிலஎடுப்பு பணி)

58.00

 

மொத்தம்

58.00

 

ஒட்டுமொத்தம்

877.75

  விரிவான திட்ட அறிக்கை  

1

கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் சந்திப்பில் பல்வழிச்சாலை மேம்பாலம் அமைத்தல்

 

2

மடிப்பாக்கம் பகுதியில் மவுண்ட் மேடவாக்கம் சாலை மற்றும் தெற்கு உள்வட்ட சாலை சந்திப்பில் சாலை கீழ்பாலம் அமைத்தல்

 
இரயில்வே மேம்பாலங்கள் அகலப்படுத்துதல் :

மவுண்ட்- பூந்தமல்லி -ஆவடி சாலையில் கி.மீ. 20/8 மற்றும் உள்வட்டச் சாலையில் கி.மீ 12/2-13/2ல் இரயில்வே மேம்பாலங்கள் அகலப்படுத்த விரிவான திட்ட அறிக்கை நடைபெற்று வருகிறது. விரிவான திட்ட அறிக்கை முடிவுற்றவுடன் இரயில்வே மூலம் வைப்பு நிதிப் பணியாக இரயில்வே பகுதிப்பணி செயல்படுத்தப்படும்.

ஆற்றுப்பாலங்கள்

வ. எண் பணிகளின் விவரம் மதிப்பீட்டு தொகை (ரூ. கோடியில்)
 

முடிவுற்ற பணிகள்

 

1

மவுண்ட் - பூவிருந்தவல்லி ஆவடி சாலையில் (மா.நெ.55) கி.மீ 15/8ல் கூடுதலாக இரண்டு வழித்தட பாலம் அமைத்தல்

5.50

 

மொத்தம்

5.50

 

நடைபெறும் பணிகள்

 

2

பெரியார் ஈ.வெ.ரா.சாலையில், அமைந்தகரை அருகில் கூவம் ஆற்றின் குறுக்கே கூடுதல் மூன்று வழித்தட பாலம் அமைத்தல்.

8.00

3

இராமாபுரம் அருகில் மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் கி.மீ.2/6ல் அடையார் ஆற்றின் குறுக்கே உள்ள உயர்மட்ட பாலத்தை அகலப்படுத்துதல்

17.00

4

திருவொற்றியூர் - பொன்னேரி - பஞ்செட்டி சாலையை கி.மீ.0/6ல் பி-கால்வாயின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்தல்.

58.64

 

மொத்தம்

83.64

 

நிலஎடுப்பு நடைபெறும் பணிகள்

 

5

தேசிய நெடுஞ்சாலை 4ல் நொளம்பூர் சாலை சந்திப்பில் கூவம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுதல் (நில எடுப்பு மட்டும்)

36.00

6.

மவுண்ட் - பூவிருந்தவல்லி - ஆவடி சாலையில் இருந்து பருத்திப்பட்டு செல்லும் சாலையில் கி.மீ.0/6ல் கூவம் ஆற்றின் குறுக்கே ஒரு உயர்மட்டப் பாலம் அமைத்தல் (நில எடுப்பு மட்டும்)

3.10

 

மொத்தம்

39.10

 

ஒட்டுமொத்தம்

128.24

சாலைப்பணிகள் :

வ.எண் பணியின் பெயர் பணி நிலவரம் மதிப்பு ரூபாய் கோடியில்

1

தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை கி.மீ.0/0-8/4 அமைத்தல் (நிலஎடுப்பு மட்டும்)

நிலஎடுப்பு பணி நடைபெற்று வருகிறது

75.50

2

கிழக்கு கடற்கரை சாலை கி.மீ.11/8-23/2 (திருவான்மியூர் அக்கரை) ஆறுவழிச்சாலை அமைக்கும் பணி (நிலஎடுப்பு மட்டும்)

நிலஎடுப்பு பணி நடைபெற்று வருகிறது

354.66

 

மொத்தம்

 

430.16

பாதசாரிகள் சுரங்க நடைபாதை :

5 பாதசாரிகள் சுரங்க நடைபாதைகள் அமைக்க ரூ.19.00 கோடி மதிப்பில் பிரதான சாலைகளில் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் பாதசாரிகள் பாதுகாப்பாக கடக்கும் வகையில் பாதசாரிகள் சுரங்க நடைபாதை அமைக்க நிலுவைப் பணிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

வ. எண் பாதசாரிகள் சுரங்க நடைபாதை பணிகள்

1.

அண்ணா சாலையில் சின்னமலை ஏ.ஜி தேவாலயம் அருகில் சுரங்கபாதை அமைத்தல்

2.

ஜி.எஸ்டி சாலையில், கிண்டியில், எம்.கே.என் சாலை சந்திப்பு அருகில் சுரங்கபாதை அமைத்தல்

3.

ஜவஹர்லால் நேரு சாலையில் (உள்வட்டசாலை) கி.மீ 1/6ல் ஈக்காடுதாங்கல் மல்லாடி நிறுவனம் அருகில் சுரங்க நடைபாதை அமைத்தல்

4.

ஜவஹர்லால் நேரு சாலையில் (உள்வட்டசாலை) கி.மீ 2/7ல் காசி திரையரங்கம் அருகில் சுரங்க நடைபாதை அமைத்தல்

5.

ஜவஹர்லால் நேரு சாலையில் (உள்வட்டசாலை) கி.மீ 7/7ல் கோயம்பேடு புறநகரப் பேருந்து நிலையம் அருகில் சுரங்க நடைபாதை அமைத்தல்

நடைமேம்பாலம் (FOB)

தாம்பரம் இரயில்வே நிலையம் அருகில் கி.மீ 26/8ல் பயணிகள் பாதுகாப்பாக சாலையை கடப்பதற்காக நடைமேம்பாலம் நகரும் படிகட்டுகளுடன் கட்டும் பணிக்கு ரூ.19.49 கோடி மதிப்பில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி பரிசீலனையில் உள்ளது.

விரிவான திட்ட அறிக்கை பணிகள்

2017-18ல் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு ரூ.10.00 கோடிக்கு அரசாணை வழங்கப்பட்டது. Japan International Co-operation Agency - JICA வின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட உள்ளது.

பணிகளின் விவரம் பின்வருமாறு :

வ.எண் பணியின் பெயர்

1.

திருவான்மியூர் - அக்கரை வரை கிழக்கு கடற்கரை சாலையில் கி.மீ 11/8- 23/2 வரை ஆறு வழித்தடமாக அமைத்தல் மற்றும் மேம்பாலம் கட்டுதல்

2.

கிழக்கு தாம்பரத்தையும், மேற்கு தாம்பரத்தையும் இணைக்கும் வகையில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய ஒரு ஆகாய நடைபாதை அமைத்தல் மற்றும் பேருந்து நிலையம் மேம்படுத்துதல்.

3.

மர்மலாங் பாலம் - இரும்புலியூர் சாலை மற்றும் கேம்ப் சாலை சந்திப்பில் கி.மீ.18/3ல் மேம்பாலம் கட்டும் பணி.

4.

கி.மீ. 76/8 தேசிய நெடுஞ்சாலை 205 (சென்னை-திருத்தனி-ரேனிகுண்டா சாலை) மற்றும் வானகரம் அம்பத்தூர் சாலை கி.மீ.6/4 சந்திப்பில் நான்கு வழி மேம்பாலம் அமைக்கும் பணி.

5.

கி.மீ.68/4 தேசிய நெடுஞ்சாலை 205 (சென்னை-திருத்தனி ரேனிகுண்டா) சாலை மற்றும் மவுண்ட் பூந்தமல்லி-ஆவடி சாலை கி.மீ.20/8 சந்திப்பில் மேம்பாலம் அமைத்தல் பணி.

6.

கி.மீ.4/2 மாதவரம்-செங்குன்றம் சாலை மற்றும் கி.மீ.19/100 உள்வட்ட சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைத்தல் பணி.

அறிவிப்புகள் 2017-18

வ.எண் பணியின் பெயர்

1.

சென்னை மவுண்ட் பூந்தமல்லி சாலையில் மியாட் மருத்துவமனை முதல் இராமபுரம், L & T, DLF அலுவலகம் வழியாக முகலிவாக்கம் வரை மேம்பாலம் ரூபாய் 214.00 கோடி மதிப்பில் அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை ரூ.1.00 கோடி மதிப்பில் நடப்பு ஆண்டில் தயாரிக்கப்படும்.

2.

குன்றத்தூர் மடிப்பாக்கம், மாடம்பாக்கம் மற்றும் கோரட்டூர் ஆகிய நான்கு சந்திப்புகளில் மேம்பாலங்கள் மற்றும் வடபழனி முதல் அசோக் பில்லர் வரை உயர் மட்ட மேம்பாலம் ஆகியன ரூ. 380.00 கோடி மதிப்பில் கட்டப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை ரூ. 2.05 கோடி மதிப்பில் நடப்பு ஆண்டில் தயாரிக்கப்படும்.

  • குன்றத்தூரில் பல்லாவரம் - குன்றத்தூர் மற்றும் சென்னை கோடம்பாக்கம் ஸ்ரீபெரும்பதூர் சாலை சந்திப்பில் மேம்பாலம்
  • மடிப்பாக்கம் கைவேலி மர்மலாங் இரும்புலியூர் சாலை கி.மீ 6/5 ல் மேம்பாலம்
  • மாடம்பாக்கத்தில் மர்மலாங் இரும்புலியூர் சாலை சந்திப்பில் கி.மீ 17/2 ல் மேம்பாலம்
  • கொரட்டூரில் திருத்தணி ரேணிகுண்டா (சூழ 205) சாலையில் கி.மீ 80/7 ல் மேம்பாலம்
  • வடபழனி முதல் அமைந்தகரை வரை உள்வட்ட சாலை கி.மீ 3/4 முதல் 5/6 வரை உயர்மட்ட மேம்பாலம்

3.

ரூ.30.00 கோடி மதிப்பில் சென்னை மறைமலை அடிகள் பாலம் இரும்புலியூர் சாலையில் கி.மீ. 17/4ல் இராஜகீழ்பாக்கம் முதல் அகரம் தென் சாலை வரை தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலையில் நிலஎடுப்பு முடிந்துள்ள பகுதியில் கி.மீ 5/450 – 8/080 ல் இணைப்புச் சாலை அமைத்தல்.

இரயில்வே திட்டப் பணிகள்

இரயில்வே கடவுகளில் மேற்கொள்ளப்படும் மேம்பாலம் / கீழ்பாலம் அமைக்கும் பணிகள் பின்வருமாறு :

வ.எண் பணியின் பெயர் மதிப்பு ரூ. கோடியில்
 

முடிவுற்ற பணிகள்

 

1

கடவு எண்: 3 - திருவொற்றியூர் மாட்டுமந்தை அருகில் சாலை மேம்பாலம் கட்டுதல்.

47.00

 

நிலுவை பணிகள்

 

2

கடவு எண்: 14 - வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில் சாலை மேம்பாலம் கட்டுதல்.

29.50

 

துவங்கப்பட வேண்டிய பணிகள்

 

3

கடவு எண்: 4 - திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகில் சாலை கீழ்பாலம் கட்டுதல்.

28.00

4

கடவு எண்: 6 - திருவொற்றியூர் விம்கோ ரயில் நிலையம் அருகில் சாலை கீழ்பாலம் கட்டுதல்.

25.50

5

கடவு எண்: 4 – கொரட்டூர் ரயில் நிலையம் அருகில் சாலை கீழ்பாலம் கட்டுதல்.

19.97

6

கடவு எண்: 16 – நந்தியம்பாக்கம் மீஞ்சூர் இரயில் நிலையம் அருகில் சாலை மேம்பாலம் கட்டுதல்.

28.32

7

கடவு எண்: 32 மற்றும் 33 - பெருங்களத்துhர் ரயில் நிலையம் அருகில் சாலை மேம்பாலம் கட்டுதல்.

76.00

8

கடவு எண்: 22 – திரிசூலம் அருகில் சாலை கீழ்பாலம் கட்டுதல்.

14.00

9

கடவு எண்: 27 – குரோம்பேட்டை இரயில் நிலையம் அருகில் வரையறுக்கப்பட்ட உபயோகத்திற்கான சாலை கீழ்பாலம் கட்டுதல்.

14.75

 

மொத்தம்

206.54

 

ஒட்டுமொத்தம்

283.04

தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டம் - III (TNUDP III):

தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டம் - III, 2005 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டு, உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்த மார்ச் 2014 வரை செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் 5 சாலை பணிகள் மற்றும் 5 நடைமேம்பாலங்கள் ஒப்பளிக்கப்பட்டது. இதில் 4 சாலை பணிகள் ரூ.84.82 கோடி மதிப்பிலும், 5 நடைமேம்பாலங்கள் ரூ.30.80 கோடி மதிப்பிலும் முடிக்கப்பட்டுள்ளது. இதில் இதர ஒரு பணியான தரமணி இணைப்புச் சாலை தற்பொழுது நடைபெற்று வருகிறது.

Feedback

Visitors Counter

000784109

Click here to watch Live Events

Last Updated: 20-09-2019
Click to listen highlighted text! Powered By GSpeech