Welcome to tnhighways   Click to listen highlighted text! Welcome to tnhighways Powered By GSpeech

நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம்

நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் 1954ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. 1956ம் ஆண்டு அன்றைய மேதகு சென்னை ஆளுநர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 1957ம் ஆண்டு அன்றைய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. சாலை, பாலப்பணிகளில் பயன்படுத்தப்படும் பொருள்கள் பற்றியும் நவீன தொழில்நுட்பம் பற்றியும் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதும் சாலை, பாலப்பணிகளில் தரக்கட்டுப்பாட்டுச் சோதனைகளை மேற்கொள்வதும் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் முக்கிய பணிகளாகும். நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் பொறியாளர்களுக்கு தொழில்நுட்ப வழிகாட்டுதல்களைத் தேவைப்படும் போது வழங்கும் பணியையும் இந்நிறுவனம் மேற்கொள்கிறது.

தலைமைப் பொறியாளர் நிலையில் உள்ள இயக்குநர் அவர்களின் கீழ் ஓர் இணை இயக்குநர், 4 துணை இயக்குநர்கள் (ஆய்வகம்) மற்றும் 8 துணை இயக்குநர்கள் (தரக்கட்டுப்பாடு), ஆகியோர் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் பணிகளைக் கவனித்து வருகின்றனர்.

நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் நோக்கங்கள் :

அனைத்து வகைப் போக்குவரத்தும் "பாதுகாப்பாகவும், தரமாகவும், வேகமாகவும், சிக்கனமாகவும், வசதியாகவும்" நடைபெறும் வண்ணம் சாலைக் கட்டுமானத்திறனை மேம்படுத்துவதே நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் நோக்கம் ஆகும்.

நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் பணிகள் :

  • நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்படும் சாலை, பாலப்பணிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரத்தினை உறுதி செய்வது.
  • நெடுஞ்சாலைத்துறையில் இயற்கை வளங்களைத் தேவையான அளவில் பயன்படுத்துவது பற்றிய தொடர்ச்சியான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது.
  • சாலைப் பணிகளின்போது அறியப்படும் தொழில்நுட்ப பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது.
  • கண்டறியப்பட்ட சாலை விபத்து பகுதிகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைத் தெரிவிப்பது.

நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள்

நடைமுறை பணிகள்

நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் மண், திண்காரை, நிலக்கீல், போக்குவரத்து ஆகிய ஆய்வகங்கள் சென்னையில் மிக நவீன கருவிகளுடன் செயல்பட்டு வருகின்றன. மேலும் விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மண்டல ஆய்வகங்களும் செயல்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்திற்குரிய வழக்கமான பணிகளான புவியின்கீழ் உள்ள மண் படிவங்களை ஆய்வு செய்வது, பாலங்களுக்கான ஆழ்துளைத் தூண்களின் தாங்குதிறனைச் சோதனைச் செய்வது, திண்காரைப் பணிகளைச் சேதமில்லாச் சோதனை முறையின் மூலம் சோதனை செய்வது, இரும்புக் கம்பிகளைச் சோதனைச் செய்வது, நெகிழும், நெகிழாத சாலைக் கட்டுமானங்களை வடிவமைப்பது, திண்காரை, நிலக்கீல் கலவைகளை வடிவமைப்பது, சாலை மேற்பரப்பின் ஓடுதளத்தில் உள்ள மேடுபள்ளங்களை அளப்பது, சாலைக் கட்டுமானத்தின் உறுதியை ‘பெங்கில்மென்பீம் டிஃப்லெக்ஷன்’ சோதனை மூலம் கண்டறிவது,  போக்குவரத்து வாகனங்களால் ஏற்படும் பாதிப்பு மற்றும் வாகன சேதம் காரணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் சாலைக் கட்டுமானத்தை வடிவமைப்பது மற்றும் சாலை சந்திப்புகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் இந்த ஆய்வகங்களில் நடைபெற்று வருகின்றன.

இத்துடன் காவல்துறையின் போக்குவரத்து பிரிவு போன்ற அரசுத்துறைகளுடன் இணைந்து போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுவும் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றொரு முக்கிய பணியாகும்.

பாதுகாப்பான சாலைகளைக் கட்டமைக்கும் நோக்கத்தோடு சாலைப் பாதுகாப்பு குறித்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் மேலும் இதர அரசு நிறுவனங்களுக்கு நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் தொழில்நுட்ப ரீதியில் வழங்கி வருகின்றது

மண் ஆய்வகம்
மண்ஆய்வகம்

‘பெங்கில்மென்பீம்’ தொய்வு சோதனை சாலையை வலுப்படுத்துதல்

மண்ஆய்வகம்

ஆழ்துளைத் தூண் சுமைப் பரிசோதனை

மண்ஆய்வகம்

நிலத்தடி மண் ஆய்வு

கற்கலவை ஆய்வகம்
கற்கலவை ஆய்வகம்

வளைப்பரிமாண வலிமை சோதனை - (சுமையேற்றத்திற்கு முன்)

கற்கலவை ஆய்வகம்

வளைப்பரிமாண வலிமை சோதனை – (சுமையேற்றத்திற்கு பின்)

கற்கலவை ஆய்வகம்

கற்கலவையில் ஆற்றுமணலுக்குப் பதிலாக தாமிரக் கழிவு துகள்களைப் பயன்படுத்தி சாலை அமைத்தல் - திருநீர்மலை சாலை

நிலக்கீல் ஆய்வகம்
நிலக்கீல் ஆய்வகம்

 திருகுசுழல் அழுத்தி

நிலக்கீல் ஆய்வகம்

  நிலக்கீல் கலவையின் செயல்திறனைக் கண்டறிதல்                                         

நிலக்கீல் ஆய்வகம்

அழுத்த முதிர்கலனைக்கொண்டு தாரின் நீண்டகால முதிர்வைக் கண்டறிதல்

நிலக்கீல் ஆய்வகம்

தனித்த நான்கு புள்ளி வளைவு இயந்திரத்தைக் கொண்டு தார்கலவையின் அயர்வு எதிர்க்கும் திறனை அளத்தல்.

போக்குவரத்து ஆய்வகம்
போக்குவரத்து ஆய்வகம்

வாகன அச்சு எடை மற்றும் வாகனச் செறிவு சோதனை

போக்குவரத்து ஆய்வகம்

சாலை மேற்பரப்பின் தன்மை சோதனை                                    

II. ஆராய்ச்சிப் பணிகள் :

தமிழ்நாடு அரசின் புத்தாக்க முன்முயற்சிப் பணிகளுக்கான நிதியின் கீழ் 2017-18ம் ஆண்டில் அரசாணை எண். (டி) எண்.192, 193, 194, நெடுஞ்சாலை (ம) சிறுதுறைமுகங்கள் (எச்.என்.1) துறை, நாள்: 07.08.2017ன்படி கீழ்க்கண்ட பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆராய்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன.

  • நெடுஞ்சாலைத்துறையில் பாலத்தின் செயல்திறனை கருவிகள் மூலம் கண்காணித்தல்
  • வட்ட சோதனை தடத்தின் உதவியுடன் நீண்ட காலம் தாங்கக் கூடிய சாலைக் கட்டுமானத்திற்கான தொழில்நுட்பம் குறித்த ஆய்வு.
  • கற்துகள்களைச் சேர்த்து சாலை அடித்தளத்தின் தாங்குதிறனை அதிகரிப்பது குறித்து கற்றறிதல் ஆராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
III. பயிற்சி :

(i) 2012ம் ஆண்டு முதல் நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் பொறியாளர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

(ii) 2016-ம் ஆண்டு பணியில் சேர்ந்த உதவிப் பொறியாளர்களுக்கு அறிமுகப் பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் புதிய பொறியாளர்களுக்கு உதவிட துறையின் வெவ்வேறு அலகுகளில் உள்ள மூத்த பொறியாளர்கள் பலரும் தங்களது பணி அனுபவங்களை வழங்கினர்.

Training Training

(iii) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிபுரியும் 118 பொறியாளர்களுக்கு, 3 நாள் தரக்கட்டுப்பாட்டு பயிற்சி வகுப்புகள் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் 6 குழுக்களாக (ஒரு குழுவுக்கு 20 நபர்கள்) பிரிக்கப்பட்டு அளிக்கப்பட்டது. 

Training Training

(iv) மத்திய சாலை ஆராய்ச்சி நிலையத்துடன், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன அவை பின்வருமாறு :

  • (i) சாலை பாதுகாப்பு தணிக்கை குறித்த பயிற்சி :
சாலை பாதுகாப்பு தணிக்கை குறித்து 103 பொறியாளர்களுக்கு 5 நாட்கள் பயிற்சிகள் நடத்தப்பட்டன. பயிற்சி பெற்ற பொறியாளர்களுக்கு அவற்றை சாலை பாதுகாப்பு தணிக்கை செய்து தீர்வு காணும் வழிமுறைகளைக் கண்டறிய அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சாலை பகுதிகள் வழங்கப்பட்டன.
Training Training Training
  • (ii) நெடுஞ்சாலை வடிவமைப்பு மற்றும் மேம்பாடு தொகுப்பு – 4 (HDM-IV )பயிற்சி

சாலைக் கட்டமைப்புக்குத் தேவையான தரவு பகுப்பாய்வு மேற்கொண்டு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முன்னுரிமையை அறிவியல் ரீதியாக தேர்ந்தெடுத்து தருவதற்கு 5 நாட்களுக்கு 19 பொறியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. நேரடிப் பயிற்சியாக பயிற்சி பெற்ற பொறியாளர்களுக்கு தொடர்ந்து மறு பயிற்சி மற்றும் விளக்க வகுப்புகளும் நடத்தப்பட்டன. மத்திய சாலை ஆராய்ச்சி நிலையத்தின் மூத்த விஞ்ஞானி திரு. o.nf. ஆம்லா அவர்கள் தலைமையில், மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தின் வல்லுநர்களால் இப்பயிற்சி நடத்தப்பட்டது.

Training Training
IV. கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்

பொறியாளர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்காக வெவ்வேறு தலைப்புகளில் தலைசிறந்த பேச்சாளர்களைக் கொண்டு பயிலரங்குகளும், கருத்தரங்குகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

Seminars Seminars
V. வாராந்திர தொழில்நுட்ப சொற்பொழிவு :

   வாராந்திர தொழில்நுட்ப சொற்பொழிவு நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் 02.04.2013 முதல் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் மாலையில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 200க்கும் மேற்பட்ட   சொற்பொழிவுகளின் மூலம்  இத்துறையில் பணிபுரியும் பொறியாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.

VI. செய்தி மடல் :

நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், துறைசார்ந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் சாதனைகளை தொகுத்து காலாண்டிதழாக செய்தி மடல் வெளியிட்டு வருகிறது.

தரக்கட்டுப்பாடு :

ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுடன் நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்படும் சாலை மற்றும் பாலங்களின் தரத்தை உறுதிப்படுத்தும் பணியையும் ஆராய்ச்சி நிலையம் மேற்கொள்கிறது.

நெடுஞ்சாலைத்துறைப் பணிகளின் தரத்தினை ஆய்வு செய்து அவற்றின் தரத்தை ஒவ்வொரு நிலையிலும் உறுதிப்படுத்திட மூன்று அடுக்கு தரக்கட்டுப்பாட்டு முறை செயல்படுத்தப்படுகிறது. வட்ட அளவில் 8 தரக்கட்டுப்பாட்டுக் கோட்டங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. பணிகளின் ஒவ்வொரு நிலையிலும் தரக்கட்டுப்பாட்டுச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகளின் தரம் உறுதிப்படுத்தப்படுகிறது.

உறுப்பினர் :

நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் கீழே உள்ள thça§fŸ/ FGk§fëš  நிர்வாக சபைக் குழு உறுப்பினராக உள்ளார்.

  • இந்திய சாலை குழுமம்
  • இந்திய சாலை குழுமத்தின் நெடுஞ்சாலை ஆராய்ச்சி வாரியம்
  • சாலை போக்குவரத்து நிறுவனம்

Feedback

Visitors Counter

000784254

Click here to watch Live Events

Last Updated: 20-09-2019
Click to listen highlighted text! Powered By GSpeech