Welcome to tnhighways   Click to listen highlighted text! Welcome to tnhighways Powered By GSpeech

துறை பற்றி

அறிமுகம்

தமிழ்நாடு அரசானது மாநிலத்தின் சாலைகள் மற்றும் பாலங்களின் பணிகளை பிரத்தியேகமாக மேற்கொள்ள 1946 ஆம் ஆண்டிலேயே புதிதாக நெடுஞ்சாலைத் துறையினை உருவாக்கிய தனித்துவ அடையாளத்தினை கொண்டது. தமிழ்நாடு,சாலைகள் மற்றும் பாலங்களுக்கான நிலையான தரவரைவுகளை,1954 ஆம் ஆண்டிலேயே கொண்டு வந்ததன் மூலம் முன்னோடியாகத் திகழ்கிறது. அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சாலைகளை பராமரித்தல்,மேம்படுத்துதல் மற்றும் ஊரக வாழிடங்களுக்கு சாலை இணைப்பினை,அனைத்து பருவகால நிலைகளிலும் வழங்குதல் ஆகியவை இத்துறையின் குறிக்கோளாகும். அரசுச் செயலாளர்,நெடுஞ்சாலைத்துறை என்னும் ஒரு புதிய பதவி 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு தற்போது வழக்கத்தில் உள்ளது. பின்னர் சிறு துறைமுகங்களும் இத்துறை வரம்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. அடுத்ததாக இத்துறை 'நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

நோக்கம்

நெடுஞ்சாலை அமைப்பின் கொள்திறன், இணைப்பு, செயல்திறன் மற்றும் பாதுகாப்பை அதிகரித்து, இம்மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த அனைத்துப் பிரிவு மக்களும் சமநிலையான சமூக பொருளாதார மேம்பாட்டை அடையச் செய்வதே நெடுஞ்சாலைத் துறையின் குறிக்கோளாகும்.

சாலை வலைப்பின்னலமைப்பின் முக்கியத்துவம்

துரிதமான தொழில் வளர்ச்சிக்கு போதுமான மற்றும் தரமான உள்கட்டமைப்பு இன்றியமையாததாகும். இதன் மூலம் ஆதாயம் தரும் தொழில் வாய்ப்புகளை மக்களுக்காக உருவாக்க இயலும். சுற்றியுள்ள கிராமப் பகுதிகளை எளிதில் அணுகக் கூடிய வகையில் இணைப்பை உருவாக்குதல், ஊரக பகுதிகளின் வளர்ச்சிக்கு வித்திடும். தமிழ்நாடு, நகர்ப்புறங்களையும், வேளாண் சந்தைப் பகுதிகளையும் மற்றும் ஊரக வாழிடங்களையும் இணைத்த, தரமான  மற்றும் பரந்து விரிந்த, விரிவான சாலை வலைபின்னலமைப்பினைக் கொண்டதாகும்..

நெடுஞ்சாலைத்துறை புதுமையான மற்றும் சிறந்த நடைமுறைகள், உயரிய தொழில்நுட்பங்கள் மற்றும் உள் (ம) வெளி வளங்களின் பொறுப்பான மேலாண்மை ஆகியவற்றின் மூலம் உயர் தரமான, சிக்கனமான, சுற்றுச்சுழலுக்கு உகந்த சாலை வலைப்பின்னலமைப்பை தமிழ்நாட்டின் சாலை உபயோகிப்பவர்களுக்கு தந்து சேவை செய்கிறது. மேலும், நம்பத்தகுந்த மற்றும் பாதுகாப்பான இச்சாலைகள் மாநிலத்தின் நீடித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலனில் சிறந்த பங்களிக்கிறது.

தற்போதைய சாலைகளின் நிகழ்நிலவரம்

மாநிலத்தில் 62017 கி.மீ வரை சாலைகளை நெடுஞ்சாலைத் துறை பராமரித்து வருகிறது. இது இந்தியாவில் உள்ள சாலைகளை விட 2.5 மடங்கு அதிகமாகும்.

சாலை நீள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

ஆண்டு மொத்த நீளம் (கி.மீ)
1951 32,300
2016 62,460
2017 62,468
2018 63,650
2019 66,039

 

வகை வாரியான சாலை விவரங்கள்

வகைப்பாடு நீளம் கி.மீட்டரில்
தேசிய நெடுஞ்சாலைகள் 6,634
மாநில நெடுஞ்சாலைகள் 11,169
மாவட்ட முக்கிய சாலைகள் 11,612
மாவட்ட இதர சாலைகள் மற்றும் கரும்பு சாலைகள் 36,624
மொத்தம் 66,039

 

வழித்தட வாரியான சாலை விவரங்கள்
வ.எண் வகைப்பாடு ஒற்றை வழித்தடம் இடைநிலை வழித்தடம் இரட்டை வழித்தடம் பல் வழித்தடம் மொத்தம்
1. தேசிய நெடுஞ்சாலைகள்     3514 3120 6634
2. மாநில நெடுஞ்சாலைகள் 38 215 8570 2346 11169
3. மாவட்ட முக்கிய சாலைகள் 321 7186 3869 236 11612
4. மாவட்ட இதர சாலைகள் 30490 4960 1103 71 36624
மொத்தம் 30849 12361 17056 5773 66039

Feedback

Visitors Counter

001708655

Click here to watch Live Events

Last Updated: 14-08-2020
Click to listen highlighted text! Powered By GSpeech